சல்கான் புதைபடிவ பூங்கா
சல்கான் புதைபடிவ பூங்கா, அதிகாரப்பூர்வமாக சோன்பத்ரா புதைபடிவ பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு புதைபடிவ பூங்காவாகும். இது சோன்பத்ரா மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 5Aஇல் ரோபர்ட்சுகஞ்சிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சால்கன் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இப்பூங்காவில் கிட்டத்தட்ட 1400 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மதிப்பிடப்பட்ட புதைபடிவங்கள் உள்ளன. கைமூர் வனவிலங்கு சரகத்தில் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள கற்பாறைகளில் புதைபடிவங்கள் வளையங்களாகக் காணப்படுகின்றன.
Read article